ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள்: கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

நெல்லை,மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Update: 2022-01-18 13:30 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்

நெல்லை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து தலைமை செயலாளர் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம், கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால்கள், பூங்காக்கள் உட்பட சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மழையின் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பணிகளை விரைவு படுத்துவதற்காக தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள், திருநெல்வேலி டவுன் நயினார்குளம் கரையை மேம்படுத்தி அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள், இராமையன்பட்டி, தச்சநல்லூர் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Tags:    

Similar News