இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் அழுத்தம் கொடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-05-11 07:13 GMT

நெல்லை முபாரக்.

இலங்கைக்கு தமிழக அரசு பொருளாதார உதவி. நல்லிணக்கம் நிலவும் சூழலைப் பயன்படுத்தி இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தமிழக முதல்வர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என  எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்து வரும் சூழலில், பொருளாதார நெருக்கடி காரணமாக அல்லல்படும் இலங்கை மக்களுக்காக தமிழக அரசு பொருளாதார உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை பிரதமராக இருந்த ராஜபக்‌ச மற்றும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அந்நாட்டு அரசால் ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவும், சிங்கள கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கவுமான நடவடிக்கைகளை இப்போதைக்கு ஏற்பட்டுள்ள நல்லிணக்கச் சூழலைப் பயன்படுத்தி, மத்திய அரசுக்கு போதுமான அழுத்தங்களை தந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்..

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News