நெல்லை மாவட்ட வழிபாட்டுத்தலங்களில் 3 நாட்கள் சாமி தரிசனம் செய்ய தடை

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர்.

Update: 2022-01-07 07:31 GMT

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தொற்று வேகமாக பரவி வருவதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தோற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 61 பேர் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் பாபநாசத்தில் உள்ள பாபநாசம் சுவாமி திருக்கோயில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகமாக கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம். தமிழக அரசின் விதிமுறைக்கு ஏற்ப பக்தர்கள் இன்று அதிகாலையில் மார்கழி மாத பஜனை கோவிலின் வெளியே நின்று பாடினர்.

Tags:    

Similar News