நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்

Update: 2023-02-05 17:00 GMT

நெல்வை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட  நான்கு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்வாடி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட நபர் கைது

ஏர்வாடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிறுமளஞ்சியை சேர்ந்த ஹரிகேசவன் (30) என்பவர் 01.05.2022 அன்று இருசக்கர வாகனத்தில் ஏர்வாடியில் உள்ள மெடிக்கலுக்கு சென்று விட்டு திரும்பி விட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, ஒருவர் லிப்ட் கேட்டு ஏறி ஏர்வாடி, சீனிவாசபுரம், ஐஸ்கிரீம் கம்பெனி அருகே அழைத்துச் சென்று அங்கு வந்த மற்ற நபர்கள் சேர்ந்து ஹரிகேசவனை அவதூறாக பேசி மிரட்டி அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஹரிகேசவன் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஆதாம்அலி  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஏர்வாடி, லெப்பை வளவு தெருவை சேர்ந்த ஜமால் முகைதீன்(25) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேற்படி காவல் ஆய்வாளர்  ஜமால் முகைதீனை  கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது

கருங்குளம், அலங்கார நகரைச் சேர்ந்த பெண் பஜார் அருகே சென்று கொண்டிருக்கும் போது, அங்கு வந்த செங்குளத்தை சேர்ந்த அய்யாகுட்டி (35) மற்றும் ஒருவர் சேர்ந்து தவறான எண்ணத்தில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பெண் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் கணேசன்  விசாரணை மேற்கொண்டு பெண்ணிடம் தவறான எண்ணத்தில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த அய்யா குட்டியை  கைது செய்தார்.

சொத்து பிரச்னை காரணமாக  கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது

மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மருதகுளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரசுப்பு(35) என்பவரின் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ்(43) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு 26.01.2023 அன்று சங்கரசுப்பு அவருடைய வீட்டிற்கு முன்பு அவருடைய சகோதரருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த துரைராஜ் மற்றும் அவருடைய சகோதரர் சங்கர் என்ற குமார் (42) ஆகிய இருவரும் சேர்ந்து சங்கர சுப்புவை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சங்கரசுப்பு மூன்றடைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு துரைராஜ், சங்கர் என்ற குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Tags:    

Similar News