ஓமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை - நெல்லை ஆட்சியர் ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து, நெல்லையில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-02 05:00 GMT

ஓமிக்ரான் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம்,  நெல்லையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்,  ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து,  துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,  மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த புதுவகை கொரோனா வைரஸ் முப்பது முதல் ஐம்பது மடங்கு மாறுதல் அடையும் தன்மையுள்ளது. இந்தியாவிலும் இருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஓமிக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் உடனடியாக விமானநிலையத்திலேயே Swab Test மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

இந்த ஆய்வுக்கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் கிருஷ்ணவேணி, மாநகர் நகர் நல அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News