நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா

மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

Update: 2022-04-23 05:31 GMT

மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பழமையான வைணவ ஸ்தலங்களில் ஒன்றான நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. 9ம் திருநாளான இன்று தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

பின்னர் சுவாமி கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளனார். அதனை தொடர்ந்து சுவாமி வரதராஜ பெருமாளுக்கு திருத்தேரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு திருத்தேர் இழுக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தேர் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டு நிலையம் சேர்க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழா ஏழு மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மின்வாரிய ஊழியர்கள் வர தாமதமானதால் சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பின் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதனால் பக்தர்களிடையே மன வருத்தம் ஏற்பட்டது.

Tags:    

Similar News