நெல்லை: ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசின் 8ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்காததை கண்டித்து மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி போராட்டம் நடத்தப்படும்.

Update: 2022-05-28 01:30 GMT

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திருநெல்வேலி பாஜக மாவட்ட தலைவர் தயார் சங்கர்.

 திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தயார் சங்கர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாரதிய ஜனதா கட்சி மக்களின் சுமையை குறைத்திட மத்திய அரசு கடந்த தீபாவளி அன்று பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைத்தது. மேலும் ரஷ்யா,உக்ரைன் போரினால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கலால் வரியையை குறைத்ததால் பெட்ரோல் விலை 9ரூபாய் 50காசும், டீசல் 7ரூபாயும், கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாயும் குறைந்தது.

மக்களின் சுமையை போக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், மாநில அரசை வரியை குறைக்க பிரதமர் பலமுறை வலியுறுத்தியும், தமிழக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் புதுச்சேரி உட்பட பெட்ரோல், டீசல் வரியை குறைத்துள்ளது.

திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 3 ரூபாயும் உடனடியாக குறைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மாநில தலைமையின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட பாஜக சார்பாக மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெறும் நல்லாட்சியின் 8ஆண்டுகள் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக மே30ம் தேதி முதல் ஜீன் 15ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. வருகின்ற ஜீன்5 ந்தேதி இராதாபுரம் சட்டமன்றம் செட்டிகுளத்தில் வைத்து நடைபெறும் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வருடகாலமாக புதிய வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி மற்றும் மனைப்பிரிவுக்கான DTCP ஒப்புதல் வழங்கப்படாமலும், அதிகாரிகளால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு  வருகின்றனர். தற்போது பணியில் உள்ள துணை இயக்குனர் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை சுமார் 128 கோப்புகள் அனுமதிக்காக காத்திருக்கிறது. மேலும் 84 மனைப்பிரிவுக்கான கோப்புகள் அனுமதிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. துணை இயக்குனரின் அலட்சியத்தால் திருநெல்வேலி மாநகர் பகுதியில் கட்டுமான தொழில் முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது மாவட்ட பொது செயலாளர்கள் வேல் ஆறுமுகம், சுரேஷ், முத்து பலவேசம் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News