நெல்லை மாவட்டம்: 30,000 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்

நெல்லை மாவட்டத்தில் 113 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

Update: 2022-05-21 06:45 GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள்.

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் டூ தேர்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 113 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். நெல்லையில் மொத்தம் 30,291 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

இதையொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு மையங்களில் கொரனோ பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. தேர்வர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செல்போன் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுதுவர்களைத் தவிர பிற நபர்கள் உள்ளே வரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல் காலை 9 மணிக்கே அனைவரும் தேர்வு மையம் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தேர்வில் முறைகேட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் 113 ஆய்வுக்குழு அலுவலர்களும், 13 பறக்கும் படை குழுக்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 27 சுற்றுக்குழு அலுவலர்களும் தேர்வை கண்காணித்து வருகிறார்கள்.

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் டி என் பி எஸ் சி தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News