நெல்லை மாநகராட்சி பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

நெல்லை மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆய்வு செய்தார்

Update: 2022-03-10 06:45 GMT

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆய்வு செய்தார்

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து அரசு தலைமை கொறடா  கோவி.செழியன் ஆய்வு. மேற்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து அரசு தலைமை கொறடா  கோவி.செழியன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலர்  ஸ்ரீனிவாசன், சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா.மாங்குடி , மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான கழிவறைகள் உள்ளதா எனவும், போதுமான வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பள்ளியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கழிவறைகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்கள்.மேலும், மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் வேய்ந்தான்குளம் பகுதியில் சி.எஸ்.ஆர் நிதியுதவி மூலம் கரைகளை உயர்த்தியும், அகலப்படுத்தியும் பலப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும், நிலத்தடி நீரை பாதுகாக்க குளத்தினை 8 அடி ஆழப்படுத்தி நீரினை தேக்கி வைக்க உரிய சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டனர். திருநெல்வேலி என்.ஜி.ஒ.பி காலனி இசைப்பள்ளி எதிரில் பி காலனி மற்றும் சி காலனியில் உள்ள மொத்தம் 954 வீடுகளில் உற்பத்தியாகும் கழிவுகளை தரம் பிரித்து, மக்கும் கழிவுகள் மட்டும் இம்மையத் திற்கு கொண்டு வரப்பட்டு, அரவை இயந்திரம் மூலம் அரைத்து தொட்டிகளில் நிரப்பி பயனுள்ள நுண்ணியிரிகள் கரைசல் சேர்க்கப்பட்டு 36 நாட்கள் தொட்டியிலேயே வைக்கப்படுகிறது. 36 நாட்களுக்கு தயாராகும் உரமானது சலிக்கப்பட்டு சாக்கு பைகளில் நிரப்பி விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. தற்போது இங்குள்ள திடக்கழிவு மேலாண்மை நுண்உரம் செயலாக்க மையம் செயல்பட்டு வருவதை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், உதவி ஆணையாளர் நிர்வாகம் வெங்கட்ராமன், உதவி ஆணையர் மேலப்பாளயம் ஜயப்பன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், திருநெல்வேலி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்கள் லெனின், நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News