நடமாடும் தடுப்பூசி வாகன மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2021-09-12 16:21 GMT

சீதபற்பநல்லூரில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருநெல்வேலியில் நடமாடும் மருத்துவ வாகன தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவஞானம், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வநாயகம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News