நெல்லை மாநகர பகுதியில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

Update: 2021-04-25 12:15 GMT

ஊரடங்கு சமயத்தில் தேவையின்றி வருபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்த காவல்துறை

நெல்லை மாநகர பகுதியில் தேவையில்லாமல் சாலையில் சுற்றி தெரிந்தவர்களை கண்காணிக்க ட்ரோன் மூலம் காவல்துறை  மாநகர துணை ஆணையாளர் சீனிவாசன் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்களை கண்காணிப்பதற்காக ட்ரோன் மூலம் நெல்லை மாநகர காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.  வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்தனர்

இதனை நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News