உள்ளாட்சி தேர்தல் ஆலாேசனை கூட்டம்: சென்னைக்கு படையெடுக்கும் அதிமுக நிர்வாகிகள்

சென்னையில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு நெல்லையில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னை சென்றனர்.

Update: 2021-08-11 17:06 GMT

சென்னையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திற்கு நெல்லை அதிமுக நிர்வாகிகள் சென்னை பயணம்.

திருநெல்வேலி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

தேர்தலில் அதிமுகவினர் போட்டியிட்டு 100% வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் (12.08.2001) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் இன்று நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News