நெல்லை மாநகராட்சியில் மாமன்ற கூட்ட அரங்கு சுத்தம் செய்யும் பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சியில் வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ள கூட்ட அரங்கு சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-01 08:58 GMT

சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் மாமன்ற கூட்ட அரங்கு.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் 50 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 4 பேரும், சுயச்சை ஒருவரும் வெற்றி பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்ற 55 மாமன்ற உறுப்பினர் களும் நாளை காலை திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகம் இராஜாஜி மண்டபத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் பதவி ஏற்க உள்ளனர்.

மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ள கூட்ட அரங்கில் மேஜைகள், நாற்காலிகள் சுத்தம் செய்யப்பட்டு புதிய ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு மேயர், துணை மேயர் மேஜைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாளை காலை 11 மணிக்கு தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான விஷ்ணுசந்திரன் மன்ற உறுப்பினர்களுக்கு பதவிபிரமானம் செய்து வைக்கிறார். அதனை தொடர்ந்து 4ம் தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News