நெல்லையில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்: கோட்டாட்சியர் விசாரணை

பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியை உட்பட ஆசிரியர்கள் 4 பேர் தற்காலிக பணி நீக்கம்.

Update: 2021-12-20 08:51 GMT

நெல்லை டவுனில் உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை. இதைத்தொடர்ந்து தலைமையாசிரியை உள்ளிட்ட 4 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்.

நெல்லை டவுனில் உள்ள சாப்டர் மேனிலைப்பள்ளியில் கழிவறையில் உள்ள சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலி. 4 பேர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக தாளாளர் சாலமோன் செல்வகுமார், , கட்டிட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி ஆகிய 2 பேரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலைமையாசிரியை ஞானசெல்வி இருதய வலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில் இன்று விசாரணை துவங்கியது. இந்த விசாரணையின் போது பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்திரத்தன்மை சான்றிதழ் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தலைமை ஆசிரியை ஞானசெல்வி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதில் வருவாய்த்துறை, மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர், தீயணைப்புபடை நிலைய அதிகாரிகள் வழங்கிய பள்ளியின் கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள் குறித்த ஸ்திரத்தன்மை சான்று தொடர்பான ஆய்வு மற்றும் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது அரசு அதிகாரிகள் நேரடியாக சென்று பள்ளியை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கினார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டன. மேலும் பள்ளியின் நிர்வாகம் சார்பில் பள்ளி நிர்வாகிகளும் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் நெல்லை டவுனில் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து டயோசீசன் மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாக மேலாளர் உத்தரவுப்படி தலைமை ஆசிரியை ஞானசெல்வி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகிய 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

Tags:    

Similar News