அகஸ்தியர் அருவிக்கு அனுமதி மறுப்பு; வனத்துறை - போலீசார் மாேதல்

அகஸ்தியர் அருவிக்கு அனுமதி மறுத்ததால், போலீசார் பழிவாங்கும் நோக்கில் நடந்ததாக உயரதிகாரியிடம் வனத்துறை புகாரளித்துள்ளனர்.

Update: 2021-08-04 05:37 GMT

பைல் படம்.

நெல்லை மாவட்டம், முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி போன்ற சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள காடுகளில் அரியவகை வன உயிரினங்களும் இருக்கின்றன.

கடந்த வாரம் அகஸ்தியர் அருவி பகுதிக்கு உயர் அதிகாரியின் உறவினர் என ஒரு கும்பலை விக்கிரமசிங்புரம் காவல்துறையை சேர்ந்த நபர் ஒருவர் அழைத்து சென்றுள்ளார். பாபநாசம் சோதனை சாவடியில் கொரானா தடைகாலம் என்பதால் யாருக்கும் அனுமதியில்லை என வனத்துறையினர் மறுத்துவிட்டனர்.

அதன் எதிரொலியாக. அம்பாசமுத்திரத்தில் நடந்து முடிந்த புலிகள் தின கொண்டாட்டத்திற்கு முதலில் போலீஸ் தரப்பு அனுமதி மறுத்தனர். பின்னர் கட்டுபாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டது. புலிகள் தின விழாவில் கலந்துகொண்டு திரும்பிய வேட்டை தடுப்பு காவலர் அய்யாகுட்டி, ஹெல்மட் அணியாமல் வந்துள்ளார்.

அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், ஹெல்மெட் அணியவில்லை என அவரை பிடித்து வாகனத்திற்கு அபராதம் விதிக்காமல் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு அபராதம் செலுத்தி வண்டியை பெற்று கொள்ளுகிறோம் என தெரிவித்தனர்.

ஆனாலும், போலீசார் வாகனத்தை விடுவிக்கவில்லை. இரண்டுநாட்களுக்கு பிறகு பிரச்சனை உயர்மட்டம் வரை செல்லும் என்பதை  அறிந்த போலீசார் வாகனத்தை திருப்பி கொடுத்துள்ளனர்.

அகஸ்தியர் அருவிக்கு தடை காலத்தில் செல்ல அனுமதிக்காமல் இருந்ததால் எங்களை பழிவாங்குகின்றனர். சட்டத்த்தை பின்பற்ற கூறியதால் எங்கள் மீது மீண்டும் ஏதாவது பொய்வழக்கு போடப்படலாம் என்று உயர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனுவோடு, சம்பவத்தன்று அகஸ்தியர் அருவிக்கு உயர் அதிகாரியின் உறவினர்கள் என யார், யார் வந்தார்கள் என  சோதனை சாவடியில் பதிவான சிசிடிவி பதிவு காட்சிகளும் இணைத்து உயர் அதிகாரிகள், முதல்வர் ஆகியோருக்கு புகார் செய்துள்ளதாக தெரியவருகிறது. இரு துறைகள் மீதான மோதல் ஆரோக்கியமானதா? என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது தமிழக அரசு?

Tags:    

Similar News