மாநகரை தவிர மற்ற இடங்களில் தேர்தல் விதிமுறைகள் அமல்: நெல்லை ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 868 வாக்காளர்கள் உள்ளனர். ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

Update: 2021-09-14 07:56 GMT

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.

நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று மாலை முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும், மாநகர பகுதிக்கு இது பொருந்தாது என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெல்லை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 122 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 204 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள் , 1731 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 2069 பதவி இடங்களுக்கு நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது.

224 பதவி இடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1188 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 ஆண் வாக்குச்சாவடிகள், 30 பெண் வாக்குச் சாவடிகள் மற்றும் 1128 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 868 வாக்காளர்கள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியங்களுக்கு 20 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 277 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவர், மூன்று காவல் துறை அலுவலர்கள் மற்றும் வீடியோ பதிவாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாடு கண்காணிப்பாளர் அறை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு 2000 காவல்துறையினரும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின்போது 1600 காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News