தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி

Update: 2021-04-22 04:15 GMT

234 தொகுதிகளிலும் 10,000 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் முன்பே டேபிள் அமைத்து பணப்பட்டுவாடா செய்துள்ளனர். 234 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒரு ஆண்டு பட்ஜெட்டில் பாதிக்குமேல் கோவில் சொத்தின் மூலம் வருமானம் வரும் அளவுக்கு இருக்கிறது ஆனால் ஆண்டுக்கு வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக தவறான தகவலை இந்து அறநிலைத்துறை தெரிவிக்கிறது எனவே தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

Tags:    

Similar News