40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!

40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது, என கல்குவாரி விபத்து மீட்பு தொடர்பாக வருவாய்துறை தலைமை செயலாளர் தகவல்

Update: 2022-05-18 02:56 GMT

அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் விபத்து தொடர்பாக மூன்று பேரை மீட்கும் பணியில் வருவாய் துறை தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது: 

கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுந்த வண்ணம் இருந்தது. இதனால் மீட்பு பணிகள் தாமதம் ஆகியது. சரிந்துள்ள பாறைகள் எடை சுமார் 40 ஆயிரம் டன் இருக்கும். இதனால் பாறை நிலைத்தன்மை குறைவாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிகமான வீரர்களை பள்ளத்துக்குள் இறங்க செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மீட்பு பணிகளை செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது சுமார் மூன்று மணி நேரமாக பாறைகள் சரியாமல் உள்ளதால் தற்போது பின்னர் மீண்டும் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நேற்று அவர் கூறினார்.

Tags:    

Similar News