நெல்லையில் மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

நெல்லையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

Update: 2021-11-17 04:15 GMT

நெல்லை சந்திப்பு சாலை, குமார சுவாமி திருக்கோவிலில், கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, மாலை  அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்.

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்,  மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நேற்றைய தினம் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று,  மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

இதையொட்டி, நெல்லை சாலை,  குமாரசாமி திருக்கோவில்,  நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்காக, நெல்லை சந்திப்பு சாலை குமார சுவாமி திருக்கோவிலில் சிறப்பு ஹோமமும், அதனைத் தொடர்ந்து விநாயகர் சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து,  சுப்பிரமணியர் சன்னதி முன்பு,  நீண்ட வரிசையில் காத்திருந்து, குருசாமிகளின் திருக்கரங்களால் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில்,  இந்த ஆண்டு ஆர்வமாக அதிகளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News