அண்ணா மறுமலர்ச்சி திட்ட செயலாக்க ஆலோசனைக் கூட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது

Update: 2022-06-25 15:00 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023 திட்ட செயலாக்கம் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 மற்றும் 2022-2023 திட்ட செயலாக்கம் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்  நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:  திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 ஆம் ஆண்டு மற்றும் 2022-2023 ஆண்டு திட்ட செயலாக்கம் அனைத்து கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தபடும் ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஊருவாக்குவதோடு பொதுமக்களுக்கு தேவையான தனிநபர் பயனடையும் திட்டங்களை பல்வேறு அரசு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான இந்த ஆலோசனை கூட்டம் மூலமாக துரிதமாக செயல்படுத்தபடவேண்டும்.

இதன் முக்கிய குறிக்கோள் அனைத்து குக்கிராமங்களிலும் நீர்நிலைகளை பராமரித்தல், அரசு பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் உருவாக்குதல், அங்கன் வாடி கட்டிடங்கள்,ரேசன் கடை கட்டிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டுதல்,தெருக்களுக்கு கான்கீரிட் சாலை மற்றும் வண்ணகற்கள் சாலை அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்குவதுடன் மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும். தனிநபர் தேவைகள்(பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி அட்டை வழங்குதல்,முதியோர் ஓய்வூதியம்) பூர்த்தி செய்தல், தரிசு நிலங்களை மேம்படுத்துதல், வேளாண்மை பகுதிகளை உருவாக்குதல், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்களை ஆண்டுதோறும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயல்படுத்தபடவேண்டும்.

மேலும் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் கிராமங்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யபட வேண்டும் மேலும் அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய மற்றும் சமமான வளர்ச்சிக்கு மக்கள் தொகை மற்றும் குக்கிராமங்களின் எண்ணிக்கைக்கு சமமான முக்கியத்துவம் வழங்கபடவேண்டும். Rotate screen இதன் அடுத்தகட்டமாக சேரன்மகாதேவி கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைைையில் வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி 91 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்களை வழங்கிட  வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு .

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ஜெயஸ்ரீ, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிசப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திர சேகர், கிராம ஊராட்சி தலைவர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News