நெல்லையில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் நகர்ப்புற சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-05 07:19 GMT

நெல்லையில் நகர்ப்புற சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவிகிதம் முதல், 150 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவித்திருந்த நிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி நகர்ப்புற சொத்து வரி உயர்வு அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுகவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News