அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

திங்கள் கல்லூரில் அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-28 11:00 GMT

அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

நெல்லையை அடுத்த திங்கள் கல்லூரில் அதிமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட கழக செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என் கணேசராஜா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கழக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News