நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் தீ விபத்து

தீயணைப்பு வீரர்களின் செல்பி மோகத்தால் ஆபத்தை சந்திக்கும் அபாயம் பொதுமக்கள் ஆதங்கம்

Update: 2021-08-02 18:58 GMT

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள்கள் விற்பனை செய்யும் நிறுவன குடோன் எரிந்து பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகின. தகவலறிந்து விரைந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புதுறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயில் பல இலட்ச ரூபாய் மதிப்பிலான கட்டில் மெத்தை எரிந்து சாம்பலானது. நான்கு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட வீரர்களில், ஒருசிலர் தீ அணைக்கும் பரபரப்பான நேரத்தில்  தங்கள் செல்போனில் தீ எரியும் காட்சியை பதிவு செய்வது, செல்பி எடுப்பது என  செய்தனர். இதைகண்ட பொதுமக்கள் வீரர்களின் செயல்கள், இம்மாதிரியான நேரத்தில் செல்போனில் படம் எடுப்பது தவறு என உயர் அதிகாரிகள் அறிவுரை செய்ய வேண்டும்.  இல்லை எனில் அணைக்கும் பணியில் கவன குறைவால் தீயில் சிக்கி  காயமடையவோ அல்லது உயிரை இழக்கும் நிலையை  சந்திக்க வேண்டிவரும் என ஆதங்கம் தெரிவித்தனர்.   

Similar News