கொட்டித் தீர்த்த மழை - மக்கள் நடமாட்டம் இல்லாததால் மகிழ்ந்த பூமித்தாய்...

கொட்டிய மழையால் சாலைகள் சாக்கடையானது..

Update: 2021-05-19 10:05 GMT

நெல்லையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வழக்கம் போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது

இருப்பினும் அவ்வப்போது மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர் இதற்கிடையில் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் காரணமாக கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழை பெய்தது

அதேபோல் நெல்லை நகர்ப்பகுதியில் மழை இல்லாவிட்டாலும் வெயில் தாக்கம் குறைந்து இதமான வானிலை நிலவி வந்தது பின்னர் நேற்று முன்தினம் முதல் மீண்டும் நெல்லையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்

அந்த வகையில் இன்று காலை முதல் கத்தரி வெயில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் திடீரென நெல்லை நகரில் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது

குறிப்பாக நெல்லை தச்சநல்லூர் வண்ணாரப்பேட்டை தாழையூத்து நெல்லை சந்திப்பு ஆகிய இடங்களில் சுமார் 20 நிமிடம் கன மழை கொட்டி தீர்த்தது. இரண்டு நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்தது குளிர்ச்சி நிலவியது

Tags:    

Similar News