கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் - அமைச்சர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில்.

Update: 2021-05-13 16:56 GMT

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தலைவர் அப்பாவு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்கள் மற்றும் அரசு முதன்மை செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான செல்வி ஆகியோர் முன்னிலையில் கொரானா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது

ஆய்வுக் கூட்டத்தில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், தென் மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் காவல்துறை மாநகர காவல் ஆணையாளர் அன்பு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தமிழக முதல்வர் உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும் மாவட்டத்திற்கு தேவையானது குறித்தும் மற்றும் பணியாளர்கள் பணி குறித்தும், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து காணொலிக் காட்சி வாயிலாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும், படுக்கை வசதிகள், தரமான உணவு வழங்கப்படுகின்றதா? போன்றவை குறித்து கலந்துரையாடினார்கள்

மேலும் காந்திமதியம்மன் கொரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரியும் மருத்துவர்களிடம் நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வசதி போன்றவை, மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான தேவைகளை குறித்தும் கேட்டறிந்தனர்

மேலும் அவர்கள் கூறும் பொழுது கொரோனா நோயில் இருந்து முற்றிலுமாக விடுபடுவதற்கு பொதுமக்களை ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அவசர தேவை இன்றி மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்ல நேரிடும் பொழுது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்லவேண்டும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்கள் குறை நோய் தொற்று ஏதேனும் தென்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பொதுமக்கள் குறித்து ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் 24 மணி நேரமும் இயங்கிவரும் ஒரு தகவல் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்

இந்த ஆய்வுக் கூட்டத்தில் சார் ஆட்சியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் தாயால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ஜி கண்ணன், துணை இயக்குனர் வரதராஜன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் உதவி இயக்குனர் அருணாச்சலம் மற்றும் அரசு அலுவலர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News