திருநெல்வேலியில் ஓய்வூதியர் சங்கம் தர்ணா

Update: 2021-02-02 07:48 GMT

திருநெல்வேலியில் அனைத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பேரவை முடிவின்படி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், நிலுவை கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் தழுவிய மாபெரும் தர்ணா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் குமாரசாமி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, சத்துணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850 வழங்கிடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினார்.

தர்ணாவில் தமிழ்நாடு மின்சார ஊழியர் ஓய்வூதியர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாமணி, எஸ்சிடிசி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கோபாலன், கோமதிநாயகம் அபுபக்கர் வைகுண்டமணி, முருகன், பத்மநாபன்,முத்துகிருஷ்ணன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News