ரஜினி அரசியலுக்கு வராதது எங்களுக்கு பலம் விஜய்வசந்த்

Update: 2021-01-12 07:00 GMT

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் தான் என தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் விஜய்வசந்த் கூறினார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் இன்று தூத்துக்குடி மாவட்டம் வந்தார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரையில் மக்களுக்கு அதிக சேவை செய்ய வேண்டும் என்ற கனவு எனது தந்தை வசந்தகுமாருக்கு இருந்தது. அதனை அவரது மகன் என்ற முறையில் நிறைவேற்ற பாடுபடுவேன். தேர்தலில் கட்சி மேலிடம் முடிவு செய்தால் போட்டியிடுவேன். மற்றபடி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே விருப்பம்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் தான். தற்போது காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.திரையரங்குகளில் 100-சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி பின்பு அதனை தடை செய்தது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தான் காரணமா அல்லது விஜய்-யின் மாஸ்டர் படம் என்பதாலா என்பது தெரியவில்லை. மாஸ்டர் படம் வெளியாவது மூலம் தான் மீண்டும் திரையரங்குகள் பழைய நிலையை பெறும் என்றார்.

Tags: