தென்காசி: நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

வீராணம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்தனர்.

Update: 2022-01-29 02:37 GMT

வீராணம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டத்தில் பெரியகுளம் என்று அழைக்கப்படும் வீரானம் குளம் மூலம் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இப்போது விவசாயிகள் தற்போது நெல் பயிரிட்டு உள்ளனர். இன்னும் சில நாட்களில் அறுவடை நடைபெறும் நிலையில் இப்பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அப்போது விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் பிசான சாகுபடியில் நெல் பயிரிட்டு உள்ளோம். இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுவரை எங்கள் பகுதியில் அரசு மூலம் நெல் கொள்முதல் அமைக்கவில்லை.

இதனால் பிற தலைவர்கள் விவசாயிகளின் நிலை மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யும் நிலை உள்ளது. எனவே அரசு தலையிட்டு இந்த முறை எங்கள் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News