மூன்று மாத குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி

தென்காசி அருகே மூன்று மாத குழந்தையுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய். குழந்தை பலியான சோகம்

Update: 2021-08-22 08:15 GMT

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்

சுரண்டை அருகே உள்ள மருக்கலான் குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரிய பாண்டி என்பவர் மனைவி தங்கச் செல்வி வயது (30) இவர்களது மகள் கனுஷ்கா (3 மாதம்) தங்கச்செல்வி சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தங்கசெல்வி தனது 3மாத குழந்தையுடன் அதிகாலை 5 மணி அளவில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்செயலாக அப்பகுதிக்கு வந்தவர்கள் ஏதோ சத்தம் கேட்கவே அதனை பார்த்து தங்க செல்வி மற்றும் கனுஷ்கா ஆகியோரை மீட்டுள்ளனர். இருப்பினும் குழந்தை கனுஷ்கா இறந்து விட்டது. தாய் தங்கசெல்வி உயிருடன் மீட்கப்பட்டார்.

இது குறித்து ஊத்துமலை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவசர ஊர்தி 108 மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இது குறித்து ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News