குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Update: 2021-01-01 09:15 GMT

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி செங்கோட்டை குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மிதமான மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மழை அளவு குறைந்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது.

பாதுகாப்பு வளையத்துக்குள் தண்ணீர் விழுவதால் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குளித்து வருகின்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி என அனைத்திலும் தண்ணீர் சீராக விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Tags: