உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் 26 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-06 05:49 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு 2238 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மொத்தம் மனுக்கள் 2212 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியில் 212 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 208 பேர் மனு ஏற்கப்பட்டது.

தென்காசி நகராட்சியில் 206 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 205 பேர் மனு ஏற்கப்பட்டது.

புளியங்குடி நகராட்சியில் 232 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 228 பேர் மனு ஏற்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சியில்  171 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 170 பேர் மனு ஏற்கப்பட்டது.

சுரண்டை நகராட்சியில் 156 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 155 பேர் மனு ஏற்கப்பட்டது.

செங்கோட்டை நகராட்சியில்  80 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 76 பேர் மனு ஏற்கப்பட்டது.

மொத்தமாக நகராட்சிகளுக்கு 1057 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1042 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே போல் அச்சன்புதூர், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆய்க்குடி, குற்றாலம், இலஞ்சி, கீழப்பாவூர், மேலகரம், புதூர் செ.,பண்பொழி, ராயகிரி, சாம்பவர் வடகரை, சிவகிரி, சுந்தரபாண்டியபுரம், திருவேங்கடம், வடகரை, வாசுதேவநல்லூர், உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கு 260 வார்டுகளுக்கு நேற்று வரை 1181 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனையில் 11 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1170 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News