தென்காசியில் தொடர் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்காசி நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-17 10:12 GMT

கோப்பு படம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடனா, குண்டாறு மற்றும் அடவி நயினார் நீர்த்தேக்கங்களில் உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுவருகிறது.

இதன் காரணமாக கடனாநதி, அனுமன் நதி, குண்டாறு, சிற்றாறு ஆகிய ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பொதுமக்கள் நீர்நிலைகள், அணைகள், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் குளிக்கவோ, இறங்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் எனவும், கரையோர பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழை, வெள்ள இடர்பாடுகள் தொடர்பான உதவிகளுக்கு 24 மணி நேரமும் இயங்கிவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News