தென்காசியில் அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடிப்பு . ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.

Update: 2021-11-12 13:31 GMT

தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டை வழி தடத்தில் சுரண்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மேம்பாலம் அருகே நடு பல்க் சிக்னலில் முன்பக்க டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் மேம்பாலம் மற்றும் இருபுறமும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் அரசுப் பேருந்தின் சக்கரத்தை மாற்றி அப்புறப்படுத்தினர்.

இந்த திடீர் விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் பலி ஏதும் ஏற்படவில்லை.

Tags:    

Similar News