தென்காசியில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா

தென்காசியில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

Update: 2021-12-17 00:45 GMT

கூட்டுறவு மருந்தகத்தில் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. 

தென்காசியில் 0.941 தென்காசி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில்,  கூட்டுறவு மருந்தகத்தை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். அதேவேளையில்,  தென்காசி சுவாமி சன்னதி பஜார் மீன் மார்க்கெட் அருகில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு மருந்தகத்தில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர் கார்த்திக் கௌதம், கூட்டுறவு சார் பதிவாளர்கள் கார்த்திகேயன், ராஜ், முதுநிலை ஆய்வாளர் பள்ளிகொண்டான்,  கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மல்லிகா, மேலாளர் ரெங்கராஜ், சுப்புராஜ், நைனார் முஹம்மது, கண்ணன், பாஸ்கர், சரவணன், சங்கரமணி, மாரிமுத்து, பிச்சை, முகம்மது மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார். 

Tags:    

Similar News