குற்றாலத்தில் மாணவிகள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணி

குற்றாலத்தில் மாணவிகள் பங்கேற்ற தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

Update: 2023-03-16 10:18 GMT

தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பேரூராட்சிகள் சார்பில் தூய்மையான நகர்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி. வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி  தூய்மை நகரங்களை பாராட்டி அவற்றிற்கு அரசின் சார்பில் பரிசுகள் மற்றும் பாராட்டு வழங்கப்பட்டு வருகிறது. தூய்மையின் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் அனைத்து தர உள்ளாட்சிகளிலும் துவங்கப்பட்டு பிரதி மாதம் 2வது சனிக்கிழமை மற்றும் அனைத்து நகர்ப்புற 4வது சனிக்கிழமைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் இந்த தூய்மைப்பணி குறித்த விழிப்புணர்வு பேரணி குற்றாலம், மேலகரம் மற்றும் இலஞ்சி பேரூராட்சி சார்பில் குற்றாலத்தில் நடந்தது. இதில் குற்றாலம் பராசக்தி கல்லூரியை சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

பேரணியை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்  துவக்கி வைத்தார். குற்றாலம் அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணி கல்லூரி வரை சென்றடைந்தது.

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா . அரசு மற்றும்  குற்றாலம், மேலகரம் மற்றும் இலஞ்சி பேரூராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கும். மேலும் முறையாக குப்பைகளை பிரித்து வழங்கும் கடைகாரர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News