கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி

கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் தகராறில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு.

Update: 2022-05-02 15:00 GMT

மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் மஜரா ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தலைவரின் கணவர் தலையிட்டு மிரட்டுவதாக உறுப்பினர்கள் பலர் மனு அளித்தனர்

கிராம சபை கூட்டம் நேற்று அரசு உத்தரவுப்படி நடைபெற்றபோது வழங்கப்பட்ட வரவு, செலவு கணக்குகள் அரசு விதிகளுக்கு புறம்பாக உள்ளதாகவும், சட்ட விதிகளுக்கு முரணாக ஊராட்சி மன்ற தலைவரும், துணைத்தலைவரும் கூட்டு சதி செய்து தவறான வரவு செலவு பட்டியலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது உறுப்பினர்களும், பொதுமக்களும் கணக்கு கேட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது பஞ்சாயத்து தலைவரின் கணவர், உறுப்பினரோ பொதுமக்களோ கணக்கு வழக்கு கேட்க கூடாது என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பெண் பஞ்சாயத்து தலைவராக உள்ள போது கணவரோ உறவினரோ தலையீடு செய்ய கூடாது என்ற சட்டத்தை மீறி பஞ்சாயத்து தலைவரின் கணவர், பஞ்சாயத்தை கட்டுக்குள் கொண்டு வருவது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவு செலவு கணக்கிலும் இது தெளிவாகி உள்ளதாகவும் கடையாலுருட்டி, கடம்பன் குளம், திருமலாபுரம், வேலப்ப நாடாரூர் ஆகிய பகுதி பொதுமக்களை ஊராட்சி தலைவரும் அவரது கணவரும் மிரட்டியதாகவும் இதனை விசாரித்து கணக்கு வழக்குகளை சரிபார்த்து மோசடியை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News