நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2022-02-25 08:33 GMT

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜை வழிபாடு.

சிவங்கை மாவட்டம், சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டை நகரில் அமைந்துள்ள புராண சிறப்புமக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வழிபாடு மிக விமர்சியாக நடைபெற்றன.

முன்னதாக கோவில் பிரகார மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மனை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து கோவில் அர்ச்சகர் தலைமையில் ஏராளமான பெண்கள் வரிசையாக அமர்ந்து மங்கலப் பொருட்களை வைத்து திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

விளக்கு பூஜையில் மஞ்சளில் விநாயகர் பிடித்து கணபதி பூஜையுடன் திருவிளக்கு பூஜையை துவங்கினார். தொடர்ந்து திருவிளக்கிற்கு குங்குமத்தால் உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் செய்தனர். பின்னர் 1008 திருவிளக்கு போற்றி மகாலட்சுமி மந்திரங்கள் ஜெபித்து திருவிளக்கிற்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கண்ணுடைய நாயகி அம்மனை வழிபட்டனர்.

Tags:    

Similar News