கடனை செலுத்துவதில் நாணயமானவர்கள் மகளிர் சுய உதவிகுழுவினர் - அமைச்சர் பெருமிதம்

வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் நாணயமானவர்கள் மகளிர் சுய உதவிகுழுவினர் என அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-10 13:11 GMT

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கும் அமைச்சர் பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கான சூழல் நிதி கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார்.

திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 1936 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 19.14 கோடி சுழல் நிதி கடன்களை வழங்கினார். 

ராம பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் மகளிர் ஒருங்கிணைந்து குழுவாக அமைத்து அந்த பகுதியில் மகளிர் சுய தொழில் அமைத்து நிலையான வருமானம் பெற்றிடும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் வங்கிகளின் மூலம் தொழில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் திருப்பி செலுத்தாமல் வராக்கடன் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் தொழில் கடன்கள் பெற்றவர்களில் மகளிர் சுய உதவி குழு மட்டுமே 99% சிறப்பாக கடனை திருப்பி செலுத்தி நாணயமிக்கவர்களாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுவது பெருமையாக உள்ளது என பாராட்டிப் பேசினார்.

Tags:    

Similar News