பெண்களுக்கு எதிரான வன்கொடுமை; விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் நீதிபதி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து- விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி.

Update: 2021-08-23 09:36 GMT

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா தலைமையில் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகள் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள், டெங்கு காய்ச்சல், சட்ட உதவிகள் பெறுவது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை முதன்மை குற்றப்பிரிவு நீதித்துறை நடுவர் சுதாகர் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண் நீதிபதியே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்களை வழங்கியது அனைவராலும் பாராட்டப்பட்டது.

Tags:    

Similar News