கால்வாய் ஆக்கிரமிப்பு நிலம்; சிலையா ஊரணி கிராம மக்கள் சாலை மறியல்

கால்வாய் ஆக்கிரமிப்பு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சிலையா ஊரணி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-10 15:02 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட சிலையா ஊரணி பாெதுமக்கள்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே போரடப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மரியதாஸ்(50). இவர் காளையார்கோவில் கிருஷ்ணா நகர் பகுதியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனை இடத்தை வாங்கி பத்திர பதிவு செய்து பட்டா மாற்றி உள்ளார்.

அந்த இடத்தை அனுபவிக்க முயற்சி செய்யும்போது, சிலையா ஊரணி கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு சொந்தமான கண்மாய்க்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளதாக கூறி தடுத்தனர். எனவே மரியதாஸ் மதுரை உயர் நீதிமன்றத்தில் தனது இடத்தை மீட்டு ஒப்படைக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பட்டாதாரர் கூறிய நிலத்தை அளவை செய்து அவரது நிலத்தை எடுத்துக் கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது‌. இதனையடுத்து காளையார்கோவில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், காளையார்கோவில் ஆய்வாளர் சரவணன்,காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நில அளவை செய்து மனை இடத்தின் ஒரு பகுதியில் நீர்வரத்து கால்வாய் செல்லும்படி சிமெண்ட் பைப் மூலம் வழித்தடம் அமைத்துவிட்டு மீதி இடத்தை ஒப்படைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலையா ஊரணி கிராம மக்கள் காளையார் கோயில் - கல்லல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

Tags:    

Similar News