குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாம்:மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Update: 2021-07-23 07:52 GMT

சிவகங்கையில் குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளைத் தாக்கும் நிமோனியா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர் நல மையத்தில்  மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று இன்று தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மாதம்தோறும், 1500 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,மாவட்ட மருத்துவ துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Similar News