தமிழக முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கைகளால் வெள்ளப் பேரழிவு தவிர்க்கப்பட்டது

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு ஒரு கூடுதல் சுமையாகவே உள்ளது

Update: 2021-11-11 22:30 GMT

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

முதல்வரின் துரிதமான நடவடிக்கைகளால்   பேரழிவு தவிர்க்கப்பட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்  தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், பாகனேரியில்  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு போல், தற்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு முதலமைச்சரின் துரித நடவடிக்கையும், நிர்வாகத் திறமையும் தான் காரணம்.

கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை சரி செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு ஒரு கூடுதல் சுமையாகவே உள்ளது.  தமிழக முதலமைச்சர்  நிச்சயமாக  அதனையும் விரைவில் சீரமைப்பார். வெள்ளச் சேதங்களை சீரமைக்கும்  பணிகளால்  உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போவதற்கு வாய்ப்பில்லை. வெள்ள சேதங்களையும் சீரமைக்கும் அதே வேளையில், நீதிமன்ற உத்தரவுபடி குறிப்பிட்ட கால அவகாசத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் நடத்த வேண்டும். தென் தமிழகத்தில் தேவையான அளவுதான் மழை பெய்துள்ளது. அதனால் சேதங்கள் அதிகம் இல்லை. மழை பெய்து சேதம் ஏற்பட்டால் , உள்ளூர் அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம்  உடனடியாக  சரிசெய்யப்படும் என்றார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்.

Tags:    

Similar News