ஆசிரியர்கள்,மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Update: 2021-04-21 12:15 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலவச மாஸ்க் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2 ம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதை அடுத்து சிவகங்கை வாரச்சந்தை அருகே உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்குகள் மற்றும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியினை சிவகங்கை நகராட்சி ஆணையர் ஐயப்பன் தொடங்கி வைத்தார். இவர்களுடன் சிவகங்கை நகர போக்குவரத்து ஆய்வாளர் திரவியம், சிவகங்கை நகர துணை ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பள்ளி ஆசிரியர் என்எஸ்எஸ், என்சிசி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிவகங்கையில் உள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா முன்தடுப்பு பணியாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

Tags:    

Similar News