சிவகங்கையில் தேர்தல் பணிக்கு 8 ஆயிரம் பேர் : கலெக்டர்

வாக்குப்பதிவின்போது 8 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

Update: 2021-03-13 10:02 GMT

வாக்குப்பதிவின்போது 8 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் - கலெக்டர்  பேட்டி.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வாக்குப்பதிவு மைய அதிகாரிகளுக்கு எலக்ட்ரானிக்   வாக்குப்பதி இயந்திரங்களை கையாள்வது குறித்த முதல்கட்ட செயல்முறை பயிற்சியை பார்வையிட்ட கலெக்டர்  மாவட்டம் முழுவதுமுள்ள 4 தொகுதிகளில் வாக்குப்பதிவன்று 8 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்த்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் 1679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இன்நிலையில் இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அங்கு வைக்கப்படும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த முதற்கட்ட பயிற்சியானது அந்தந்த தொகுதிகளில் உள்ள தலைநகரங்களில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இன்று சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சியானது சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இதனை கலெக்டர்  மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆங்கு அளிக்கப்படும் பயிற்சிகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1679 வாக்குச்சாவடிகள் அமையவுள்ள நிலையில் அதில் 8059 பேர் பணியாற்றவுள்ளனர் அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு குறித்தும் தெளிவுபடுத்தப்படும் என்றதுடன் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Tags:    

Similar News