ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியாேகம்; சாலையில் கொட்டிய பொதுமக்கள்

சிவகங்கையில் உள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்வதாக சாலையில் கொட்டி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-26 15:02 GMT

சிவகங்கை ரேஷன் கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததால் சாலையில் அரிசியை கொட்டிய பொதுமக்கள்.

சிவகங்கை நகர் மஜித் ரோட்டில் உள்ள ரேசன் கடையில் புழு வண்டு வைத்த தரமற்ற அரிசி விநியோகம் செய்வதாக சாலையில் அரிசியை கொட்டி பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

சிவகங்கை நகர் மஜித் ரோட்டுல் உள்ள ரேசன் கடையில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தரமற்ற புலு வைத்த அரிசியை வினியோகம் செய்ததாகவும் ரேசன் கடை பணியாளரிடம் கேட்ட பொழுது தங்களை மரியாதை இல்லாமல் பேசியதாக கூரி பொதுமக்கள் தாங்கள் வாங்கிய ரேசன் அரிசியை சாலையில் கொட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தால் இப்பகுதி பரபரப்பானது. இது குறித்து ரேசன் கடை பணியாளரிடம் கேட்ட பொழுது மேல இருந்து அரிசி இப்படி தான் வருகிறது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறினார்.

Tags:    

Similar News