தீப்பெட்டிகளால் 2 நிமிடத்தில் அப்துல்கலாம் உருவம் அமைத்து மாணவர்கள் சாதனை

அப்துல்கலாம் உருவத்தை 21ஆயிரம் தீப்பெட்டிகளைக் கொண்டு 2 நிமிடத்தில் உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

Update: 2021-09-22 09:21 GMT

முன்னாள் குடியரசுத்தலைவர்  டாக்டர் அப்துல் கலாம் உருவத்தை 21ஆயிரம் தீப்பெட்டிகளில் 2 நிமிடத்தில்  உருவாக்கி  கல்லூரி மாணவர்கள் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தனியார் கல்லூரியில் 49 மாணவர்கள் இணைந்து 21 ஆயிரம் தீப்பெட்டிகள் மூலம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவப்படத்தினை 2 நிமிடம் 10 நொடிகளில் உருவாக்கி, உலக சாதனை புத்தகமான சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.  கல்லுரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,  மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு சாதனை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர் .


Tags:    

Similar News