சிவகங்கை மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தொடக்கம்

இன்று நடைபெறும் 750 முகாம்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Update: 2021-10-23 08:45 GMT

சிவகங்கை மாவட்டத்திஸ் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் மதுசூதனரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் ஆறாம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி  இன்று வைத்தார்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயை கட்டுபடுத்த இன்று 6ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபற்று வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கையில் உள்ள வார சந்தை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புசி முகாமினை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி ஆய்வு செய்து பொதுமக்கள் ஊசி போடுவதை பார்வையிட்டு கொரோனா விழிப்புணர்வு பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

பின்னர் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பற்றிய பதாகைகள் அடங்கிய ஆட்டோக்கள் பிராசார வாகனத்தை கொடி அசைத்து துலக்கிவைத்தார்.சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராம் கணேஷ் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.  பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம்  957572       நபர்களுக்குதடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.  இன்று நடைபெறும் 750 முகாம்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி  போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது 89500       தடுப்பூசிகள்  இருப்பில் உள்ளன. தடுர்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் 1800 பேர் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.

Tags:    

Similar News