மலேசிய போதை பொருள் கும்பலிடம் சிக்கிய இளைஞர்: சிவகங்கை இளைஞரை மீட்க கோரிக்கை

காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜன்ட் சரவணன் மூலமாக ரூ .80 ஆயிரம் செலுத்தி மலேசியாவுக்கு சென்றார்

Update: 2021-09-23 09:18 GMT

சிலகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மவேசியாலிவ் சிக்கிய மகனை மீட்டுத்தரக்கோரி  மனு அளித்த தாய்

மலேசிய போதை பொருள் கும்பலிடம் விற்க்கப்பட்ட சிவகங்கை  இளைஞரை மீட்டுத்தரக்கோரி  அவரது  தாய் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தார்.

சிவகங்கை அருகே உள்ள முத்துபட்டிபுதூரைச்  சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணன். இவரது இளைய மகன் ஆனந்த் (20) இவர் கடந்த வருடம் மலேசியாவில் உள்ள கோயில் வேலைக்கு, காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ஏஜன்ட் சரவணன் மூலமாக  ரூ .80 ஆயிரம் செலுத்தி  சென்றார். அங்கு சென்ற ஆனந்த்க்கு, கோவில் வேலை  வழங்கப்படவில்லை. மாறாக  அங்குள்ள போதை பொருள் கும்பலிடம்  தான் விற்கப்பட்டது தெரியவந்தது . இந்த விவரத்தை  தனது குடும்\பத்தினருக்கு  வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை, அப்போதைய சிவகங்கை காவல் கண்கணிப்பாளர் ரோகித்நாதனிடம், பெற்றோர்கள் தெரிவித்தனர் அவர் தமிழக காவல் துறை தலைவர் மூலமாக  செய்து அந்த இளைஞரை மலேசியா காவல் துறையினர் மீட்டு அங்கு உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.   தற்போது அந்த இளைஞரை மீட்டு தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார், சிவகங்கை  மாவட்ட ஆட்சியர்  மதுசூதன ரெட்டியிடம் கண்ணீர் மல்க மனு  அளித்தார்.   மலேசியாவில் உள்ள இளைஞரின்  வேண்டுகோள் விடுக்கும் வீடியோ காண்போரை கண்கலங்க செய்தது ,

Tags:    

Similar News