சிவகங்கை தமிழ்ச் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் சார்பில், நூல் வெளியீட்டு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு, செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-09-13 11:49 GMT

சிவகங்கை தமிழ் சங்கத்தின் சார்பில், நூல் வெளியீட்டு விழா மற்றும் ஆசிரியர்களுக்கு செம்மல் விருது வழங்கப்பட்டது. 

சிவகங்கை தமிழ் சங்கத்தின் சார்பில், காந்தி வீதியில் உள்ள தனியார் திரையரங்கில், ஆசிரியர்களுக்கு  செம்மல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்,  சிவகங்கை தமிழ் சங்க புலவர்கள் எழுதிய "கல்வி தந்த கற்பங்கள்" என்ற நூலை, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து,  மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் தர்மராஜன், பாஸ்கரன் அருளப்பன் ,சீனிவாசன் ஆகியோருக்கும், கே.ஆர். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பகிர்க நாச்சியப்பன், சு.ப தேவி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணப்பன், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் புலவர் சீனிவாசன், RRK பள்ளி ஆசிரியர் சுப்பம்மாள் மற்றும் ஆஷாகனி ,புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சாவித்திரி ஆகியோருக்கு செம்மல் விருது வழங்கப்பட்டது.


அதேபோல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கமலம், மன்னர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் காளீஸ்வரன், வெற்றி, பாலகிருஷ்ணன், பிச்சை, ராமகிருஷ்ணன், சந்திரசேகரன், நடராஜன், கோவிந்தராஜன், ஆகியோருக்கும் இந்த விழாவில், ஆசிரியர் செம்மல் விருதினை மாவட்ட எஸ்பி செந்தில்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இணைந்து வழங்கினர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை, தமிழ் சங்க தலைவர் ஜஹவர், செயலாளர் யுவராஜ், பொருளாளர் குமார், புரவலர் பிரபாகரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News