முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சிவகங்கை : காரணமின்றி வந்தோருக்கு போலீஸ் எச்சரிக்கை

சிவகங்கை நகர வீதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றியவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்

Update: 2022-01-09 16:32 GMT

முழு ஊரடங்கை முன்னிட்டு சிவகங்கையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸார்

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சிவகங்கை நகரில்  காரணமின்றி  வெளியே வந்தவர்களை போலீஸார்  எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில்  முழு ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் அத்தியாவசியம் என்று வீதிகளில் சுற்றித் திரிபவர்கள் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

கொரோனா மூன்றாம் அலை வெகுவாக பரவி நேற்று ஒரே நாளில் பாதிப்பை எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது இந்நிலையில் தமிழக அரசு வார இறுதி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக சிவகங்கை நகரில் அனைத்து பகுதிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களான உணவு பால் செய்தித்தாள் மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் வீதிகளில் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றியவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். முறையான ஆவணங்களை காட்டி செல்பவர்களுக்கு அனுமதி அளித்தனர்.

Tags:    

Similar News